சுடச்சுட

  

  அரசியல் கட்சியினர் 2 நாள்களுக்குள் தங்களது சுவர் விளம்பரங்களை அழிப்பதோடு, கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும். இல்லையெனில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் என்.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

  கடலூர் சட்டப் பேரவை தொகுதிக்கான அனைத்துக் கட்சி கூட்டம், கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

  தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான என்.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,

  காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் க.நரசிம்மன், வட்டாட்சியர் எஸ்.அன்பழகன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ஆர்.ஜான்சிராணி, தேர்தல் துணை வட்டாட்சியர் எஸ்.சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் (தேர்தல்) பா.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில் கோட்டாட்சியர் பேசியதாவது: அரசியல் கட்சியினர் தங்களது வாகனங்களில் கட்சிக் கொடிகளை கட்டியிருப்பதற்கு உரிய அனுமதி பெற வேண்டும். அனுமதியில்லாமல் வாகனங்களில் கட்சிக் கொடியினை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

   கடலூர் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் கட்சியினர் 2 நாள்களுக்குள் தங்களது சுவர் விளம்பரங்களை அழிப்பதோடு, கொடிக்கம்பங்களையும் அகற்ற வேண்டும். இல்லையெனில் சட்டரீதியான நடவடிக்கைக்கு உள்படுத்தப்படுவார்கள். தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம் நடத்துவதற்கு 9 இடங்களும், தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதற்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மட்டுமே கட்சியினர் கூட்டம் நடத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

   கூட்டத்தில் அதிமுக சார்பில் கே.ஆர்.பாலகிருஷ்ணன், திமுக நகரச் செயலர் கே.எஸ்.ராஜா, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோ.மாதவன், பாமக மாவட்டத் தலைவர் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், மதிமுக நகரச் செயலர் கோ.ராமசாமி, தேமுதிக எக்ஸ்.வேதநாயகம்,

  பாஜக துறைமுகசெல்வம், சங்கர்கணேஷ், இந்திய குடியரசு கட்சியின் மாவட்டச் செயலர் பால.வீரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai