சுடச்சுட

  

  தன்னார்வ மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

  By சிதம்பரம்  |   Published on : 13th March 2016 07:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போலியோ சொட்டு மருந்து முகாம்களில் பங்கேற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட (அங்கம்-40) தன்னார்வ மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

  சிதம்பரத்தில் உள்ள அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அங்கம்-40 இணைந்து தொடர் போலியோ சொட்டு மருந்து முகாமினை கடந்த ஜனவரி 17 முதல் 19ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், பிப்ரவரி 21 முதல் 23ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நடத்தின.

  இந்த முகாம்களில் சுமார் 13 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த முகாமானது சிதம்பரம் ஆரம்ப சுகாதார நிலையம், நகரப் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் இதர முக்கியப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடைபெற்றது.

  முகாமில் பணியாற்றிய ஆங்கிலத்துறை தன்னார்வ மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.மணியன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். பதிவாளர் கே.ஆறுமுகம் சிறப்புரையாற்றினார். கலைப்புல முதல்வர்  ஆர்.ராஜேந்திரன் வாழ்த்துரையாற்றினார்.

  முன்னதாக, ஆங்கிலத் துறைத் தலைவர் க.முத்துராமன் வரவேற்க, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் குரு.அற்புதவேல் ராஜா நன்றி கூறினார். விழாவில் மருந்தாளுநர் சரஸ்வதி முத்துராமன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai