Enable Javscript for better performance
தீ விபத்து; மழை பாதிப்பு: வியாபாரிகள் கூட்டமைப்பு நிவாரணம்- Dinamani

சுடச்சுட

    

    தீ விபத்து; மழை பாதிப்பு: வியாபாரிகள் கூட்டமைப்பு நிவாரணம்

    By கடலூர்  |   Published on : 13th March 2016 07:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீ விபத்து மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டோருக்கு வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.

    கடலூர்-சிதம்பரம் சாலையில் செம்மங்குப்பத்தில் மளிகைக் கடை நடத்தி வருபவர் எஸ்.ஆர்.பன்னீர்செல்வம். இதே பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் பி.பாஸ்கர். கடந்த 7ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில் இருவரது கடைகளும் எரிந்து சேதமாகின.

    கடலூர் பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஷேக்லால் (72). பிஸ்கெட் வியாபாரி. அண்மையில் பெய்த கன மழை, வெள்ளத்தால் இவரது வியாபாரத்துக்கான பொருள்கள் சேதமடைந்தன.

    திருப்பாதிரிபுலியூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கடலூர் மாவட்ட உணவுப் பொருள் வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.பி.ராமச்சந்திரன், பாதிக்கப்பட்ட மளிகைக் கடை வியாபாரிக்கு ரூ.25 ஆயிரம், டீக்கடைக்காரர் மற்றும் பிஸ்கெட் வியாபாரிக்கு தலா ரூ.2,500 வீதம் நிதியுதவி வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்டச் செயலர் என்.செல்லப்பாண்டியன், பொருளர் மு.ராமச்சந்திரன், துணைத் தலைவர் கலைக்குட்டி வி.முருகேசன், துணைச் செயலர் ராஜேஷ்குமார், நிர்வாகிகள் பால்வண்ணன், முருகன், கோபு, வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai