சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்படுகிறது.

  தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், அரசியல் கட்சியினர் மேற்கொள்ளும் செலவுகளை கண்காணித்து அதனை பதிவு செய்யவும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் பணியில் பல்வேறு துறைகளின் மாவட்ட அளவிலான உயர் அலுவலர்கள் கண்காணிப்பாளர், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

   களத்தில் பணியாற்றும் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு உள்ளிட்டோருக்கும், தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கும் இடையே தொடர்பினை ஏற்படுத்தும் வகையில் அனைவருக்கும் ஸ்மார்ட்போன் வழங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  அவர்கள் மேலும் கூறுகையில், பறக்கும் படையில் பணியாற்றுவோருக்கு ஒரு வாகனத்துக்கு ஒரு ஸ்மார்ட்போன், சிம் கார்டுடன் வழங்கப்படும். இது முழுக்க, முழுக்க இணையதளம், கட்செவி அஞ்சல் உள்ளிட்டவைகளை பயன்படுத்தும் வகையில் வழங்கப்படும். அதிகளவில் பணம் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட தேர்தல் முறைகேடுகளை பறக்கும் படையினரோ அல்லது நிலையான கண்காணிப்புக் குழுவினரோ கண்டால் உடனடியாக அதனை புகைப்படமாகவோ அல்லது விடியோவாக பதிவு செய்து கட்செவி அஞ்சல் குழுவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இக்குழுவில் ஆட்சியர், சென்னையிலுள்ள தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள்.

   மேலும், ஒவ்வொரு வாகனத்துக்கும் ஜிபிஎஸ் கருவி வழங்கப்படுகிறது. இந்தக் கருவி மூலமாக குறிப்பிட்ட வாகனம் எந்தப் பகுதியில் சென்றுகொண்டிருக்கிறது என்பதை சென்னையிலிருந்தே தேர்தல் ஆணைய அலுவலர்கள் தெரிந்துகொள்வார்கள். முறைகேடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் பெறும் புகாரை, அந்த இடத்தின் அருகில் எந்த வாகனம் உள்ளது என்பதை ஜிபிஎஸ் கருவி மூலமாக கண்டறிந்து உடனடியாக அந்தக்குழுவுக்கு தகவல் தெரிவிக்கும். இவ்வாறு அனைத்து நடவடிக்கைகளும் இணையம் மூலமாக பிணைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai