சுடச்சுட

  

  நெய்வேலி தொகுதியை தவாகவுக்கு ஒதுக்க வலியுறுத்தல்

  By கடலூர்  |   Published on : 13th March 2016 07:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அதிமுக கூட்டணியில் நெய்வேலி தொகுதியை தவாகவுக்கு ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவரணி செயற்குழுக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் ச.முத்துக்குமார் தலைமை வகிக்க, மாவட்டத் தலைவர் ச.ராஜசேகர் முன்னிலை வகித்தார்.

  மாநில நிர்வாகி தி.கண்ணன், மாநில செயலர் பா.அருள்பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுப் பேசினர்.

   சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பாடுபடுவது.

  சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு தொடர்ந்து முயற்சி செய்துவரும் முதல்வருக்கு பாராட்டுத் தெரிவிப்பது.

  பேரவைத் தேர்தலில் நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதியை தவாகவுக்கு ஒதுக்க அதிமுகவை  வலியுறுத்துவது.

  அத்தொகுதியில், நிறுவனத் தலைவர் தி.வேல்முருகனை போட்டியிட வைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

   நிர்வாகிகள் வில்லியம்ஸ், தங்கபாண்டியன், ஜான்பால், செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  முன்னதாக மாவட்ட துணைச் செயலர் க.புருஷோத் வரவேற்க, நகரச் செயலர் வே.கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai