சுடச்சுட

  

  புதிய நடைமுறை அமல்: வாக்களிக்க காத்திருக்க வேண்டாம்

  By கடலூர்  |   Published on : 13th March 2016 07:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாக்காளர்கள் வாக்களிக்கக் காத்திருக்காமல், வரிசை நிலவரத்தை குறுந்தகவல் மூலமாக அறிந்துகொள்ளும் நடைமுறை அறிமுகமாகிறது.

  தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற இலக்குடன் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. அதற்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேர்தலில், நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் நிலை பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் ஏற்படுகிறது. இதனால், சிலர் வாக்களிக்காமல் திரும்பிச் சென்று விடுகின்றனர்.

  இதனை களைவதற்கான முயற்சியையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதன்படி 1950 என்ற எண்ணுக்கு வாக்காளர் கியூ (q‌u‌e‌u‌e) என டைப் செய்து, தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து குறுந்தகவல் அனுப்பினால், வாக்குச் சாவடி மையத்தில் எத்தனை பேர் நிற்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ளலாம்.

  இதற்காக வாக்குச்சாவடி மையங்களில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

  அதேபோல மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பிரெய்லி முறையில் வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவை அச்சடிக்கப்பட்டிருக்கும். மேலும், அவர்கள் வசதியாக சென்று வரும் வகையில் சாய்வு மேடை வசதியும் செய்யப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai