சுடச்சுட

  

  புதிய வரி விதிப்பு முறை அறிமுகம்: வணிகவரி ஆலோசகர்களுக்குப் பயிற்சி

  By கடலூர்  |   Published on : 13th March 2016 07:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூரில் வணிகவரி ஆலோசகர்களுக்கான பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

  தமிழ்நாடு அரசு வணிகவரித்துறை அண்மையில் புதிய வரி விதிப்பு முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது. மதிப்புக் கூட்டப்பட்ட வரியில் (வாட்) கூடுதல் அம்சங்களை இணைத்து மொத்தத் தீர்வுத் திட்டம் (டிஎஸ்பி) என்ற வரி விதிப்பு திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தில், சிறு வணிகர்கள் முதல் பெரும் வணிகர்கள் வரை தங்களது மாதாந்திர வணிகத்தை வணிகவரித்துறை இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும்.

   இத்திட்டத்தை கையாளும் முறை, அதன் உள்கூறுகள் குறித்து வணிகவரி, வருமானவரி ஆலோசகர்கள் மற்றும் கணக்காளர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலான பயிற்சி வகுப்பு கடலூரில் நடைபெற்றது. கடலூர் வரி ஆலோசகர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற பயிற்சி வகுப்புக்கு, சங்கத்தின் செயலர் கே.ஜி.கனி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஏ.கோவிந்தராஜ், ஆர்.ஆறுமுகம், பழனிசாமி முன்னிலை வகித்தனர். சென்னையைச் சேர்ந்த சி.மகேஷ், சங்கத்தின் தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விளக்கமளித்தனர்.  பயிற்சியில், கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி பகுதிகளிலிருந்து 65 பேர் பங்கேற்றனர். முன்னதாக சங்கப் பொருளர் கே.கமலநாதன் வரவேற்க, செயற்குழு உறுப்பினர் கே.குமார் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai