Enable Javscript for better performance
மக்கள் நீதிமன்றம்: 517 வழக்குகளுக்கு தீர்வு- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் நீதிமன்றம் மூலமாக மாவட்டம் முழுவதும் 517 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

    மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாலம், பண்ருட்டி, நெய்வேலி, பரங்கிப்பேட்டை, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

     மாவட்டம் முழுவதும் 1,200 வழக்குகள் விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 517 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. தீர்வுத் தொகையாக ரூ.8.21 கோடி வழங்கிட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

     குறிப்பாக 213 வங்கிக் கடன் வழக்குகள், ரூ.1.21 கோடிக்கு சுமூகமாக முடிக்கப்பட்டன. என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்கள் 64 பேருக்கு ரூ.1.30 கோடி இழப்பீடாக வழங்கவும், 183 மோட்டார் வாகன விபத்துகளுக்கு ரூ.4.14 கோடி, 49 சிவில் வழக்குகளில் ரூ.1.44 கோடிக்கும் தீர்வு காணப்பட்டது.

     கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பி.தனபால் தலைமை வகித்து மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி அறிவொளி, மகிளா நீதிபதி எம்.செல்வம், சார்பு நீதிபதி எம்.தாண்டவன், மக்கள் நீதிமன்ற நீதிபதி ஜி.குமணன், சிறப்பு சார்பு நீதிபதி கணேசன் உள்ளிட்ட நீதிபதிகளும், உறுப்பினர்களான ஓய்வு பெற்ற நீதிபதிகளும் வழக்குகளை விசாரித்தனர்.

     இதில், வழக்குரைஞர்கள் கே.முகுந்தன், ஜெகநாதன், ஜி.வனராசு, சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவலர்கள் ரங்கநாதன், கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai