சுடச்சுட

  

  விபத்தில் தமாகா பிரமுகர் சாவு: ஜி.கே.வாசன் அஞ்சலி

  By சிதம்பரம்  |   Published on : 13th March 2016 07:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த தமாகா பிரமுகரின் உடலுக்கு கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

  சிதம்பரம் அருகே உள்ள சி.சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.ஆர்.ஐயப்பன் (40) . தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவராக பொறுப்பு வகித்துவந்த இவர், சேத்தியாத்தோப்பில் உரக்கடை நடத்தி வந்தார். வெள்ளிக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.

  அப்போது, சென்னை-கும்பகோணம் சாலையில் எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் ஐயப்பன் பலத்த காயம் அடைந்தார். பின்னர் அவர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸார் வழக்குப் பதிந்து, உடற்கூறு பரிசோதனைக்குப்பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

  ஜி.கே.வாசன் அஞ்சலி: தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பொதுச் செயலர் விடியல் சேகர் ஆகியோர் சனிக்கிழமை சி.சாத்தமங்கலம் கிராமத்துக்கு வந்து ஐயப்பனின் சடலத்துக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் ஏ.நெடுஞ்செழியன், மத்திய மாவட்டத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்பி பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், மூப்பனார் பேரவைத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

   உயிரிழந்த ஐயப்பனின் கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர் எல்.சீனுவாசன், ரோட்டரி சங்கத் தலைவர் வீனஸ் அன்பழகன், செயலர் சக்திவேல் ஆகியோர் செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai