Enable Javscript for better performance
விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை- Dinamani

சுடச்சுட

    

    விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக, பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 23 விளையாட்டு விடுதிகள் மற்றும் 5 விளையாட்டுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த விடுதிகள் மற்றும் பள்ளிகளில் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட் (ஆண்கள் மட்டும்), கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், தேக்வாண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபடி, துப்பாக்கிச் சுடுதல், மேசைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், கடற்கரை கையுந்துப்பந்து, வில்வித்தை ஆகிய போட்டிகளில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

     இந்த விளையாட்டில் ஏதேனும் ஒன்றில் சிறந்த வீரர், வீராங்கனையாக உருவாவதற்கு பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். இதற்காக மாவட்ட அளவிலான தேர்வு ஏப்.25-ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர் 2016-17ஆம் ஆண்டு சேர்க்கைக்கு உரிய படிவங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை அணுகி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். அல்லது w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​  என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஏப்.20ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமர்பிக்கப்பட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai