சுடச்சுட

  

  18இல் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்

  By சிதம்பரம்  |   Published on : 13th March 2016 07:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிரசித்தி பெற்ற ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 18ஆம் தேதி நடைபெறுகிறது.

  விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை (மார்ச் 14) மூலவர் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மார்ச் 15ஆம் தேதி விநாயகர் பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கி நடைபெறுகிறது. தொடர்ந்து 5 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்ற பின்னர் மார்ச் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

  விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுத் தலைவர் பூமாலை சண்முகம், செயல் அலுவலர் பா.சீனுவாசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai