சுடச்சுட

    

    கடலூர் மத்திய சிறையில் தண்டனைக் கைதி மர்மச் சாவு

    By கடலூர்  |   Published on : 14th March 2016 06:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி மர்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை இறந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ரா.தனசேகரன் (58). நெய்வேலி நகரமைப்புப் பகுதியில் 2003ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் கைதான இவர், அந்த வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு 2006ஆம் ஆண்டு முதல் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் சிறை அறையில் அடைக்கப்பட்டிருந்த தனசேகரன், சிறைக் கம்பியில் கைலியால் தூக்குபோட்ட நிலையில் கிடந்தார்.

    சிறைக் காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    சம்பவம் குறித்து சிறை அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தது:

    உயிரிழந்த தனசேகரனுக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவர்களுக்கிடையே சொத்துப் பிரச்னை தொடர்பாக தகராறு இருந்து வருகிறது. அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai