சுடச்சுட

  

  காவலருக்கு மிரட்டல் விடுத்ததாக 2 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

  புவனகிரி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றுபவர் திருஞானசம்பந்தமூர்த்தி. இவர் ஞாயிற்றுக்கிழமை புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாராம்.

  அப்போது மேல்புவனகிரி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வெங்கடேஸ்வரன்(22), கோபாலகிருஷ்ணன் மகன் ஞானபாலன்(22) ஆகியோர் திருஞானசம்பந்த மூர்த்தியை பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவதாக மிரட்டினராம்.

   ஏற்கெனவே கடந்த 8ஆம் தேதி இவர்கள் இருவரும் பள்ளி வளாகத்தில் மது அருந்தியதை காவலர் கண்டித்ததால் தற்போது மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

   இதுகுறித்து திருஞானசம்பந்தமூர்த்தி கொடுத்தப் புகாரின் பேரில் புவனகிரி உதவி ஆய்வாளர் அமலா வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai