சுடச்சுட

  

  கூட்டணி தொடர்பாக கட்சிகளுடன் பேசி வருகிறோம்: வானதி சீனிவாசன்

  By கடலூர்  |   Published on : 14th March 2016 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக மற்ற கட்சிகளுடன் பேசி வருகிறோம் என பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.

  சட்டப் பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிட விரும்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் கடலூர் திருப்பாதிரிபுலியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  கட்சியின் மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நேர்காணல் நடத்தினார்.

  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகம் முழுவதும் 234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட கட்சியினரிடம் விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் தொடர்பாக அந்தந்த மாவட்டங்களுக்கே சென்று நேர்காணல் நடத்தப்படுகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளில் போட்டியிட விரும்ப மனு தாக்கல் செய்துள்ள 85 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

  தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் வகையில் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

  எனினும், தனித்து போட்டியிடும் வகையில் பாஜக அனைத்து தகுதியும் பெற்றுள்ளது. கூட்டணி முடிவுகள் குறித்த அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என்றார் அவர்.

  நேர்காணல் நிகழ்ச்சியில் மாநிலச் செயலர் எஸ்.வி.ஆதவன், கோட்ட அமைப்புச் செயலர் ரமேஷ், மாவட்டத் தலைவர் வே.ராஜரத்தினம் ஆகியோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai