சுடச்சுட

    

    தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த இளைஞரணி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கட்சியின் மாநிலப் பொருளர் அக்ரம்கான் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணைச் செயலர் சு.ஆறுமுகம், செயலர்கள் அ.சிவா, நீலகண்டன், உ.சிலம்பு, கோ.பன்னீர்செல்வம், தலைவர்கள் ரா.விஜயகுமார், இளஞ்சூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     கடலூர் மாவட்ட இளைஞரணிச் செயலர் அ.செந்தில் வரவேற்றார். தலைமை நிலையச் செயலர் உ.கண்ணன், மாநில நிர்வாகக் குழு தலைவர் தி.திருமால்வளவன், செய்தித் தொடர்பாளர் ப.குபேந்திரகுணபாலன், மத்திய குழு உறுப்பினர் மு.பாலகுருசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாவட்டச் செயலர்கள் ரா.பஞ்சமூர்த்தி (கிழக்கு), வ.சின்னதுரை (மேற்கு), மு.முடிவண்ணன் (தெற்கு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் கட்சியின் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வது என தீர்மானித்தனர். மாவட்ட இளைஞரணித் தலைவர் ரா.அரங்நாதன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai