சுடச்சுட

    

    திருட்டு முயற்சி: தப்பிக்க முயன்றவர் கிணற்றில் விழுந்ததால் சிக்கினார்

    By கடலூர்  |   Published on : 14th March 2016 06:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேப்பூர் அருகே திருட்டு முயற்சியின்போது, தப்பிக்க முயன்றவர் கிணற்றில் விழுந்ததால் சிக்கினார்.

    வேப்பூர் அருகே உள்ள தொண்டாங்குறிச்சியைச் சேர்ந்தவர் நா.தட்சிணாமூர்த்தி (50). விவசாயி. இவர் சனிக்கிழமை இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

    நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவிலிருந்து சப்தம் கேட்டுள்ளது. உடனடியாக தட்சிணாமூர்த்தி எழுந்து பார்த்த போது 4 பேர் வீட்டுக்குள்ளிருந்து வெளியே ஓடினராம்.

    தப்பியோடிய 4 பேரில் ஒருவர் அங்கிருந்த தரைக்கிணற்றில் விழுந்தார். மற்றவர்கள் ஓடிவிட்டனர்.

    இதனையடுத்து பொதுமக்கள் கிணற்றில் விழுந்தவரை மீட்டு வேப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து தட்சிணாமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்டவர் விருத்தாசலம் வட்டம் பட்டிகிராமத்தைச் சேர்ந்த வெ.ராமசாமி (50) என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து ராமசாமியை கைது செய்த போலீஸார் மற்றவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai