சுடச்சுட

  

  தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக பாமக, இந்துமகா சபா கட்சியினர் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

  தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் மே 16ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.

  இதில், உரிய அனுமதியின்றி சுவர் விளம்பரம் எழுதக் கூடாது எனவும், ஏற்கெனவே எழுதப்பட்ட விளம்பரங்களை அழிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் மங்கலம்பேட்டை சார்பதிவாளர் அலுவலக கட்டட சுவற்றில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற பாமக மாநாடு தொடர்பான விளம்பரம் அழிக்கப்படவில்லையாம். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

  அதன்பேரில், விருத்தாசலம் வடக்கு ஒன்றிய பாமக செயலர் ராஜவேல் மற்றும் 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

  அதேபோல் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி சுவற்றில், அகில பாரத இந்து மகா சபா வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து விளம்பரம் செய்யப்பட்டிருந்தது குறித்தும் புகார் அளிக்கப்பட்டது.

  அதன்பேரில், கட்சியின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் வி.சங்கர், புதுச்சேரி மாநில அமைப்பாளர் எம்.மணிகண்டன் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai