சுடச்சுட

  

  சீர்காழி கொள்ளிடம் அருகே குண்ணம் கிராமத்தில் வீற்றுள்ள ஸ்ரீவித்ரும நாயகி அம்மன் சமேத பூமிஸ்வரர் கோயிலில் சிதம்பரம் அப்பர் தொண்டு நிறுவனம் சார்பில் உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நா.காளிதாஸ், நளினி, அமுதா, கண்ணன், சுப்பிரமணியன், சேகர், வாசுகி, சூரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்று கோயில் வளாகத்தில் இருந்த செடி, கொடிகள், முள்புதர்களை அகற்றினர். கோயில் வளாகம், சுவாமி சன்னதி ஆகியவற்றை நீரினால் கழுவி சுத்தம் செய்தனர்.

   இதையடுத்து சிவ பூஜை, திருமுறைகள் முற்றோதல் மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. உழவாரப்பணி ஏற்பாடுகளை தொண்டு நிறுவனச் செயலர் வீ.சந்திரசேகரன் செய்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai