சுடச்சுட

  

  புதுச்சேரியிலிருந்து காட்டுமன்னார்கோவிலுக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தொடர்பாக 4 பேரை மதுவிலக்கு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

  காட்டுமன்னார்கோவிலுக்கு வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு தகவல் கிடைத்தது.

  இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மதுவிலக்குப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் குமரன், ஆய்வாளர் பீர்பாஷா உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

   இந்நிலையில் காட்டுமன்னார்கோவில் அருகே வில்வகுளம் கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் மதுபாட்டில்கள் கொண்டு வந்து இறக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு துணைக் காவல் கண்காணிப்பாளர் குமரன் மற்றும் போலீஸார் விரைந்து சென்று மதுபாட்டில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேன் மற்றும் 43 பெட்டிகளில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 1,849 மதுபாட்டில்களை கைப்பற்றினர்.  

  இதுதொடர்பாக  புதுச்சேரி மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த கதிரவன் (30), செல்வம் (50), கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த ரமேஷ் (38), கூத்தப்பாக்கத்தை சேர்ந்த முரளி (33) ஆகிய 4 பேரை சிதம்பரம் மதுவிலக்கு போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் இந்த மதுபாட்டில்கள் புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்ததாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai