சுடச்சுட

    

    நீர்க் கசிவினால் பாதிப்புக்குள்ளான கடலூர் ரயில்வே சுரங்கப்பாதையில், தினமணி செய்தி எதிரொலியாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    கடலூர் நகராட்சியின் முக்கியப் பகுதியான புதுநகரையும், திருப்பாதிரிபுலியூரையும் இணைக்கும் வகையில் லாரன்ஸ் சாலையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு, கடந்த 2015ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வந்தது.

     ஆனால், கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கன மழையைத் தொடர்ந்து சுரங்கப் பாதையின் சுவர்களிலிருந்து நீர்க் கசிவு ஏற்பட்டு சுரங்கத்துக்குள் தண்ணீர் தேங்கியது.  இதனால், சுரங்கப்பாதை சேதமாகும் வாய்ப்பு உள்ளதால், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனக்கோரி கடந்த 8ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியானது.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டது. சுரங்கத்தில் சேகரமாகும் தண்ணீர் வெளியேறும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai