சுடச்சுட

  

  சட்டப் பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பதாகைகளை மாவட்டம் முழுவதும் அமைத்துள்ளது.

  தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் மே 16ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பணிகளில் மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையமாக செயல்பட்டு வருகிறது. இத்தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

  இதற்காக இளம் வாக்காளர்களான கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதோடு, கல்லூரிகளில் சிறப்பு கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், முக்கிய இடங்களில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டு அதில் மாணவர்கள், பொதுமக்கள் கையெழுத்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் நடத்தி வருகிறது.

  இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் விளம்பரப் பதாகைகள் அமைக்கப்பட்டன. அதில், வாக்களிப்பதன் அவசியத்தை விளக்கிடும் வகையிலான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

  குறிப்பாக, சினிமா செல்வதற்கும், பொழுது போக்குவதற்கும் தயாராக இருக்கும் நீங்கள் ஏன் 100 சதவீதம் வாக்களிக்க தயங்க வேண்டும் போன்ற 8 வகையான வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த வாசகங்கள் பொதுமக்களை எளிதில் கவரும் வகையில் உள்ளன.

   இதுபோன்ற விளம்பரப் பதாகைகள் மாவட்டம் முழுவதும் முக்கியமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார். மேலும், கூடுதல் இடங்களில் பதாகைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரமானது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்ற மாவட்டமாக கடலூர் விளங்க உதவிடும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai