அண்ணாமலைப் பல்கலை.யில் வேலைவாய்ப்பு முகாம்
By சிதம்பரம், | Published on : 15th March 2016 03:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அறிவியல் புல பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பிரிவின் மூலமாக ஆப்பிள் கிராஸ் நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
முகாமில் தேர்வு செய்யப்பட்ட அறிவியல் புல மாணவர்களுக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன், பதிவாளர் கே.ஆறுமுகம் ஆகியோர் பணிநியமன ஆணைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் அறிவியல் புல முதல்வர் எம்.சபேசன், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு அதிகாரி கே.கிருஷ்ணசாமி, துறைத் தலைவர்கள், வேலைவாய்ப்பு பிரிவு துறை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
பொறியியல் புலத்தில் வேலைவாய்ப்பு முகாம்: பொறியியல் துறையில் மின்னியல், மின்னணுவியல், மின்னணு கருவியல் மற்றும் மேலாண்மை துறையைச் சார்ந்த 15 மாணவ, மாணவிகள் சென்னைஆக்சிஸ் குளோபல் நிறுவனத்துக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை பல்கலைக்கழக துணைவேந்தர் செ. மணியன் வழங்கினார்.
முன்னதாக, பணிநியமன ஆணைகளை ஆக்சிஸ் குளோபல் நிறுவன இயக்குநர் அ.எழில்மாறன் துணைவேந்தரிடம் ஒப்படைத்தார்.
அப்போது மின்னியல் துறைத் தலைவர் கைலாஸபதி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அதிகாரி ரா.பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.