Enable Javscript for better performance
அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது:அமைச்சர் எம்.சி.சம்பத்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது:அமைச்சர் எம்.சி.சம்பத்

    By கடலூர்  |   Published on : 15th March 2016 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

    சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், வழக்குரைஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் கடலூரில் திங்கள்

    கிழமை நடைபெற்றது. வழக்குரைஞர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சி.மாசிலாமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ப.ரவீந்திரன் முன்னிலை வகித்தார்.

    கட்சியின் மாவட்டச் செயலரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் பங்கேற்று பேசியது: தற்போதைய தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் கடுமையாக உள்ளன. எனினும்

    அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வழக்குரைஞர்கள் மதிநுட்பத்துடன் செயல்பட்டு வெற்றி வாய்ப்புக்காகப் பாடுபட வேண்டும்.

    அதிமுக அரசின் நலத் திட்டங்கள் அனைத்து வீடுகளுக்கும், குக்கிராமங்களுக்கும் சென்றுள்ளது. தமிழக அரசின் திட்டங்கள் மத்திய அரசுக்கு வழிகாட்டியாக உள்ளது. கட்சி சார்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தொழில்நுட்பப் பிரிவு (ஐடி) தொடங்கப்பட்டுள்ளது. அப்பிரிவுடன் வழக்குரைஞர் பிரிவு இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.

    கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் கோ.ஐயப்பன், துணைச் செயலர் கே.முருகுமணி, நகரச் செயலர் ஆர்.குமரன், தொழிற்சங்கச் செயலர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலர் ஜி.ஜெ.குமார், மகளிரணிச் செயலர் நாகரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலர் பொன்.கொளஞ்சி வரவேற்க, இணைச் செயலர் அழகு.சாமிக்கண்ணு நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai