சுடச்சுட

  

  இன்று 10ஆம் வகுப்பு தேர்வு: 117 மையங்களில் நடைபெறுகிறது

  By கடலூர்  |   Published on : 15th March 2016 03:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 117 மையங்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. 41,212 மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர்.

  கடலூர் மாவட்டத்தில் இத்தேர்வினை 406 பள்ளிகளிலிருந்து 38,300 மாணவ, மாணவிகளும், தனித் தேர்வர்களாக 2,912 பேரும் எழுதுகின்றனர். தேர்வு எழுதுவதற்காக 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  தேர்வுக்கான வினாத்தாள் கட்டுக்களைப் பாதுகாக்க 12 கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேர்வினை முன்னிட்டு 28 வழித்தடங்கள் வழியாக வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனைக் கண்காணிப்பதற்காக 28 வழித்தட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

  தேர்வு கண்காணிப்புப் பணியில் 1,200 அறைக் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுகின்றனர். மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வறைக்குச் செல்லும் முன் தங்களது காலணிகள், பெல்ட்டுகள் முதலியவற்றை அறைக்கு வெளியே வைத்து விட்டுச் செல்ல வேண்டும். தங்களது உடைகளில் விடைக் குறிப்புகள் போன்ற எந்த துண்டு சீட்டுகளும் வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  மேலும் மாணவர்கள் விடைத்தாளை முழுமையாக அடித்திருந்தால் அம்மாணவர் அடுத்துவரும் 2 தேர்வுகளை எழுதுவதற்கு தடை விதிக்கப்படும். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது தங்களது வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் தேர்வு என்பதை மாணவர்கள் உணர்ந்து, எவ்வித பயமுமின்றி நேர்மையான முறையில் தேர்வினை எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டுமென ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தத் தேர்வு ஏப்.13ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai