சுடச்சுட

  

  தமிழ்நாடு கல்வித்துறை ஓய்வு பெற்ற அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தின் 5ஆவது ஆண்டு விழா, ஓய்வூதியர் தின விழா மற்றும் மாநிலப் பொதுக்குழு கூட்டம் ஆகிய முப்பெரும் விழா கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் ப.விசுவநாதன் தலைமை வகித்தார். பொருளர் ந.சிவானந்தம் ஆண்டறிக்கை மற்றும் வரவு-செலவு அறிக்கை சமர்பித்தார். தமிழக ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் மா.கண்ணன், துணைத் தலைவர் ஏ.சந்திரபோஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

  கூட்டத்தில், 8ஆவது ஊதியக்குழுவை விரைவில் அமைக்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.3,500 ஆக உயர்த்துதல், மருத்துவ காப்பீட்டுப் பயனை ரூ.4 லட்சமாக்குதல், குடும்ப நல பாதுகாப்புத் திட்ட நிதியை ரூ.1 லட்சமாக உயர்த்துதல், ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படுவது போல் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் சந்தா வசூலித்து ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். பேருந்து கட்டணச் சலுகையை புறநகரைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கடலூர் மாவட்டத் தலைவர் க.அருணாசலம், விழுப்புரம் மாவட்ட துணைத் தலைவர் எம்.பெரியசாமி, மாநில நிர்வாகிகள் என்.சுப்பையா, எஸ்.பத்மநாபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  முன்னதாக, மாநில பொதுச் செயலர் ஏ.ஜனார்த்தனன் வரவேற்க, மாவட்டச் செயலர் பி.பாலகுரு நன்றிகூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai