சுடச்சுட

    

    கடலூர் மத்திய சிறையில் கைதி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக நீதிபதி திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டார்.

    நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ரா.தனசேகரன் (58). இவர், கடந்த 1998ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, 2006ஆம் ஆண்டு முதல் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிறை அறையில் வேட்டியில் தூக்கிட்ட நிலையில் தனசேகரன் மீட்கப்பட்டார். கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சிறை அலுவலர் ஏ.வாசுதேவன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனசேகரன் குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டதை அவரது உறவினர்கள் மறுத்தனர். அவர் சிறையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறினர்.

    இந்நிலையில், திங்கள்கிழமை கடலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தனசேகரன் சடலத்தை நீதித்துறை நடுவர் எண்-2 நீதிபதி ரமேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது, தனசேகரனின் உறவினர்கள் மருத்துவமனை முன் குவிந்தனர். சடலத்தில் கழுத்து, மூக்கு பகுதியில் காயம் இருப்பதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர். மேலும், உடற்கூறு பரிசோதனையை விடியோ மூலமாக பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதன்படி மருத்துவர்கள் செந்தில், வேலவன் ஆகியோர் உடற்கூறு பரிசோதனை செய்தனர். இப்பரிசோதனை விடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து தனசேகரனின் உறவினர்களிடம் நீதிபதி ரமேஷ் விசாரணை நடத்தினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai