Enable Javscript for better performance
கொலை முயற்சி: 3 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக ஊராட்சி மன்றத் தலைவரை கொலை செய்ய முயன்றதாக 3 பேர் மீது குறிஞ்சிப்பாடி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

    குறிஞ்சிப்பாடி ஒன்றியம், சித்தாலிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன் (47). அதிமுகவைச் சேர்ந்த இவர், கிராமத்தில் உள்ள குறைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு அடிக்கடி மனு எழுதி வந்தாராம். இதுதொடர்பாக, இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் சத்தியராஜ் என்பவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சித்தாலிக்குப்பம் காளியம்மன் கோயில் அருகே ராதாகிருஷ்ணன் சென்றபோது சத்தியராஜ், வீரப்பன், ரங்கநாதன் ஆகியோர் சேர்ந்து அவர் மீது காரை ஏற்றிக் கொலை செய்ய முன்றனராம். அப்போது, அருகில் இருந்த பள்ளத்தில் குதித்து ராதாகிருஷ்ணன் உயிர் தப்பினாராம்.

    இதுகுறித்து அவர் அளித்தப் புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸார் சத்தியராஜ், வீரப்பன், ரங்கநாதன் ஆகியோர் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai