சுடச்சுட

    

    மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதைத் தொடர்ந்து அதனைக் கண்காணித்திடும் வகையில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்புக் குழுவினர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரசுக்கு சொந்தமான இடங்களில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அழிப்பு, விளம்பரப் பதாகைகள், சுவரொட்டிகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. இதன்படி திங்கள்கிழமை வரையில் 8,781 விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

    சட்டப்பேரவை தொகுதி வாரியாக திட்டக்குடி (தனி) தொகுதியில் 881, விருத்தாசலம் 561, நெய்வேலி 131, பண்ருட்டி 1,751, கடலூர் 247, குறிஞ்சிப்பாடி 684, புவனகிரி 671, சிதம்பரம் 146, காட்டுமன்னார்கோவிலில் 739 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

    இதுகுறித்து ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கூறுகையில், மாவட்டத்தில் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பாக இதுவரை 40 வழக்குகளும், முன்னெச்சரிக்கையாக 126 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 18 புகார்கள் வரப்பெற்று அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகன தணிக்கையின் போது காட்டுமன்னார்கோவிலில் 2 ஆயிரம் மதுபாட்டில்களும், பண்ருட்டி பகுதியில் துணி வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் பணம் எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்களுடன் செல்ல வேண்டும். எனினும், வாகன தணிக்கையில் ஈடுபடும் படையினர் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் செய்யாமல் பணி செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தேர்தல் அலுவலர் தெரிவித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் உடனிருந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai