Enable Javscript for better performance
நவகாளியம்மன் கோயிலில் மயானக் கொள்ளை விழா- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் பாதிரிக்குப்பம் ராஜாங்கம் நகரில் உள்ள சுயம்பு நவகாளியம்மன் கோயிலில் 11ஆம் ஆண்டு மயானக் கொள்ளை விழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

    தொடர்ந்து 10ஆம் தேதி அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. 11ஆம் தேதி கரகமெடுத்து சாகை வார்த்தலும், 12ஆம் தேதி நவகாளி அம்பிகை பூஞ்சோலை குறத்தியாக குறக்கூடை ஏந்தி பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான மயானக்கொள்ளை உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், கிரகசாந்தி ஹோமம், நவசண்டிகை ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் மக்களின் கர்ம வினைகளைப் போக்கும் வகையில் மயானக்கொள்ளையும் அதனைத் தொடர்ந்து உதிரம் கருகுதல் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நவகாளி அம்மன் சேவா சங்கம் செய்திருந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai