சுடச்சுட

    

    மனைவிக்கு மிரட்டல்: ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு

    By நெய்வேலி,  |   Published on : 15th March 2016 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

    நெல்லிக்குப்பம் அருகே உள்ள கோண்டூர், உண்ணாமலைச்செட்டி சாவடி பகுதியைச் சேர்ந்தவர் வனிதா. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவருக்கும் 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    அப்போது முதல், காளிதாஸ் தன்னுடன் சேர்ந்து வாழாமல் இருந்ததாகவும், தன்னை பிறருடன் தொடர்புபடுத்தி அவதூறாகப் பேசி, செல்லிடப்பேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வனிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai