சுடச்சுட

    

    பண்ருட்டி பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.94 லட்சம் பணம் தேர்தல் அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

    சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் கொண்டுசெல்வோர் உரிய ஆவணங்களை வைத்திருப்பது கட்டாயம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பண்ருட்டி-அரசூர் சாலையில், ஆனத்தூர் நத்தம் அருகே நிலை கண்காணிப்புக்குழு (1) ஆர்.ஸ்ரீதரன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தச்செய்து சோதனை நடத்தினர்.

    அந்த வாகனத்தில் உரிய ஆணவமின்றி ரூ.1 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. காரில் வந்த விழுப்புரம் மாவட்டம், பி.இடையார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர், சவுக்கு மரங்களை வெட்டும் பணிக்காக முன்பணம் வாங்கி வருவதாகக் கூறினாராம். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல், பண்ருட்டி-கடலூர் சாலையில் மேல்பட்டாம்பாக்கம் அருகே நிலை கண்காணிப்புக்குழு (2) பூபாலச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வாழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேந்தன் என்பவர் ஓட்டிவந்த பைக்கை நிறுத்தி சோதனை நடத்தியதில் ரூ.94,410 இருந்தது தெரியவந்ததாம்.

    உரிய ஆவணங்கள் இல்லாததால் இப்பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பணம் ரூ.1,94,410-ஐ திங்கள்

    கிழமை பண்ருட்டி கருவூலத்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் வே.உதயகுமார் செலுத்தினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai