Enable Javscript for better performance
வாக்குகள் குறைவாகப் பதிவாகும் மையங்களில் கூடுதல் கவனம்:தேர்தல் ஆணையம் முடிவு- Dinamani

சுடச்சுட

    

    வாக்குகள் குறைவாகப் பதிவாகும் மையங்களில் கூடுதல் கவனம்:தேர்தல் ஆணையம் முடிவு

    By கடலூர்,  |   Published on : 15th March 2016 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்கும் வகையில், வாக்குப்பதிவு குறைந்த மையங்களில் கூடுதல் கவனம் செலுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கு தேவையான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த தேர்தலின் போது 40 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குகள் பதிவான மையங்களில் சிறப்பு கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்களில் 10 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குகள் பதிவானது தெரிய வந்தது.

    மேலும், வாக்குப்பதிவு குறைந்த மையங்கள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    இந்த மையங்களில் வாக்காளர் விழிப்புணர்வுக் குழு அமைக்கப்படுகிறது.

    இதில், கிராம நிர்வாக அலுவலர், மகளிர் சுய உதவிக் குழுவினர், தன்னார்வ அமைப்புகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்கள் வீடு, வீடாகச் சென்று வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்குவார்கள். மேலும், குறைவான வாக்குப்பதிவான கிராமங்களில் விழிப்புணர்வுப் பதாகைகள் அமைத்தல், பேரணி, நாடகம் நடத்துவது மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இதுதவிர, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அவர்கள் துறை வாரியாக கணக்கெடுக்கப்பட்டு அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளம் வாக்காளர்கள் முழுமையாக வாக்களிக்க அவர்களிடம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள 1950 என்ற எண்ணுக்கு தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை குறுந்தகவலாக அனுப்பினால் பதில் வரும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai