வேலுடையான்பட்டு கோயிலில் :பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
By நெய்வேலி, | Published on : 15th March 2016 03:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நெய்வேலி வேலுடையான்பட்டு கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பிரசித்திபெற்ற இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா மார்ச் 23ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் ஏந்திவந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர்.
இதையொட்டி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றினர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து 10 தினங்கள் கோயில் வளாகத்தில் திருவிழா நடைபெறும். கொடியேற்ற நிகழ்ச்சியில் என்எல்சி நிறுவன இயக்குநர்கள் பி.செல்வக்குமார் (திட்டமிடல்), என்.முத்து (மனிதவளம்), மக்கள் தொடர்பு, கல்வி, சமூக பொறுப்புணர்வு தலைமைப் பொது மேலாளர் எஸ்.ஸ்ரீதர், கோயில் நிர்வாக அறங்காவலர் எம்.பழனி, அறங்காவலர்கள் டி.சுந்தரமூர்த்தி, டி.ஞானசேகரன், ஆர்.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரவில் பஞ்ச மூர்த்திகள் உற்சவம் நடைபெற்றது.