சுடச்சுட

  

  இலவச தட்டச்சுப் பயிற்சியில் பெண்கள் சேர்ந்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

  இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையின் கீழ் கடலூரில் அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 14 வயது முதல் 45 வயது வரையுள்ள பெண்களுக்கு இலவசமாக தட்டச்சு பயிற்சி ஓராண்டுக்கு வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர விரும்புவோருக்கு தங்குமிடம், உணவு, சீருடை, பாடப் புத்தகங்கள் மற்றும் பாடக் குறிப்பேடுகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.

   பயிற்சியில் சேருவோரது பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.48 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை கண்காணிப்பாளர், அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளி, நெல்லிக்குப்பம் மெயின் ரோடு, கடலூர்-1 என்ற முகவரியில் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

  எனவே, தகுதியுள்ள பெண்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai