Enable Javscript for better performance
என்.எஸ்.எஸ். திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் வெள்ளக்கரை ஊராட்சி ஒதியடிகுப்பம் கிராமத்தில் நடைபெற்றது.

    திருவள்ளுவர் பல்கலைக்கழகப் பதிவாளர் ஏ.அமுல்தாஸ் முகாமை  தொடங்கி வைத்தார். கல்லூரிச் செயலர் ஜா.பீட்டர் ராஜேந்திரம் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் மு.கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் எஸ்.சின்னப்பன் வாழ்த்திப் பேசினார்.

    முகாமில் பள்ளி வளாகம், கோயில் வளாகம் தூய்மைப்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல், கல்வி விழிப்புணர்வு, மருத்துவ ஆலோசனை, யோகா மற்றும் தியானம், விளையாட்டுப் போட்டிகள், பள்ளி படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் கல்வியைத் தொடர விழிப்புணர்வு, படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு, கலை ஆற்றல் திறனை வளர்த்தல், வாக்காளரின் உரிமை குறித்த விழிப்புணர்வு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    முகாம் நிறைவு விழாவில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் மற்றும் போட்டிகளில் வென்ற உள்ளுர் இளைஞர்களுக்கு கடலூர் வட்டாட்சியர் எஸ்.அன்பழகன் பரிசுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கல்லூரியின் தேர்வுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பி.மரிய ஆரேக்கியநாதன், ஜெயந்தி ரவிச்சந்திரன், என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர்கள் லூ.சந்தனராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சு.திருமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai