சுடச்சுட

  

  காட்டுமன்னார்கோவில் அருகே பூவிழந்தநல்லூரில், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட சிற்றூர் சீரமைப்பு சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

  பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கி வைத்துப் பேசினார். நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் செளந்திரபாண்டியன் தலைமை வகித்தார். முகாமின் அமைப்பாளர் ஐயப்பராஜா வரவேற்றார். 

   கலைப்புல முதல்வர் ராஜேந்திரன், ஆங்கிலத்துறைத் தலைவர் முத்துராமன், ஊராட்சி மன்றத் தலைவர் திரிபுரசுந்தரி, கிராமத் தலைவர் பத்மநாபன், ஆசிரியர் ஞானம், ஊராட்சிக்குழு துணைத் தலைவர் ரேணுகா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

   இந்த முகாம் வருகிற 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இலவச பொது மருத்துவம், பல் மருத்துவ முகாம், மரக்கன்றுகள் நடுதல், ஊர் துப்புரவுப் பணி மற்றும் பல்துறை பேராசிரியர்களின் சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. ராதா என்ஜினீயரிங் ஒர்க்ஸ் குழுமத் தலைவர் வெங்கடேசன் முகாமுக்கான உதவிகளை செய்துள்ளார். நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் ராஜா, அன்புசெல்வி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai