சுடச்சுட

  

  பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள ஹேமாம்புஜவல்லி சமேத சரநாராயணப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின.

  கோயிலின் கிழக்குப் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில், 5 நிலை கோபுரம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலில்  சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து, புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

  இக்கோயிலில் கும்பாபிஷேக விழா வருகிற 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

  இதனையொட்டி திங்கள்கிழமை காலை ஸங்கல்பம், வாஸ்து ஹோமம், புண்யாவாஹம் நடைபெற்றது. மாலை 5 மணியளவில் யாக சாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 8 கால பூஜைகள் நடத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai