சுடச்சுட

    

    தீ விபத்தில் காயமடைந்த பெண், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

    நெய்வேலி வட்டம்-26, பாஸ்லர் சாலையைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரோசாலின் (48). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

    திங்கள்கிழமை மாலை தேனீர் தயாரிப்பதற்காக ரோசாலின் கேஸ் அடுப்பை பற்ற வைத்தாராம். அப்போது கேஸ் அடுப்பின் அருகே இருந்த மண்ணெண்ணெய் கேன் தீப்பற்றி எரிந்ததில் ரோசாலின் பலத்த தீக்காயம் அடைந்தார்.

    இதையடுத்து, நெய்வேலி பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப்பின், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்

    தார். இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai