சுடச்சுட

  

  தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாரந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும்: ஆட்சியர்

  By கடலூர்  |   Published on : 16th March 2016 07:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்களது செயல்பாட்டினை அறிக்கையாக வாரந்தோறும் சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

  கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் அலுவலர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செயல்படவேண்டிய விதம் குறித்து ஆட்சியர் கூறியதாவது: சட்டப் பேரவைத் தேர்தலை மாவட்டத்தில் சிறப்பாக நடத்துவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களின் பணி மிகவும் முக்கியமானது.  தங்கள் தொகுதிக்கு தேவைப்படும் காவல்துறையினர்

  எண்ணிகையை பெற்றிருக்க வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்த்து அவர்களின் பட்டியலை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அலுவலரும் தேர்தல் கையேட்டை முழுவதுமாகப் படித்து அதன்படி செயல்பட வேண்டும்.

  ஆன்-லைன் மூலம் வரக்கூடிய தகவல்களையும் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை ஆய்வுசெய்து, வாக்குச்சாவடி குழுக்களை அமைத்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும். வாக்களிப்பதின் அவசியம் குறித்து விளம்பரப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அலுவலரும், தாங்கள் செயல்படும் விதம் குறித்து வாரந்தோறும் தவறாமல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மோ.ஷர்மிளா, வட்டாட்சியர்கள் பன்னீர்செல்வம், ப.காந்தி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai