Enable Javscript for better performance
தேர்தல் விதி மீறல்: 5 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சியினர் 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    ஊமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே தேர்தல் விதிமுறைகளை மீறி கொடியுடன் கம்பம் இருந்ததாக அதிமுகவின் கம்மாபுரம் ஒன்றிய இளைஞரணி பாசறை துணைத் தலைவர் ஜனார்த்தனம் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோல், தேர்தல் விதிமீறல் தொடர்பாக, எலுமிச்சை கிராமத்தைச் சேர்ந்த தேமுதிக கிளைக் கழக நிர்வாகி ஆர்.பாலமுருகன் மீது, கிராம நிர்வாக அலுவலர் எம்.பிரேம்குமார் அளித்த புகாரின் பேரில் ஊமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    குறிஞ்சிப்பாடி, பொட்டவெளியில் உள்ள அரிசி ஆலை சுவரில் உரிமையாளரின் அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்ததாக, பொட்டவெளியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலர் பி.மதியழகன் மீது குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

    பண்ருட்டி வட்டம், காட்டாண்டிக்குப்பம் கிராமத்தில் மின்கம்பம், மின்மாற்றியில் பாமக கட்சி கொடியின் வண்ணம் பூசியதாக குபேரன் மீது காவல் உதவி ஆய்வாளர் வனஜா அளித்தப் புகாரின் பேரிலும், காட்டுப்பாளையத்தில் தடுப்புச் சுவரில் தவாக கட்சிக் கொடியின் வண்ணம் பூசியதாக மன்னரசன் என்பவர் மீது காவல் ஆய்வாளர் வெங்கடேசன் அளித்தப் புகாரின் பேரிலும் காடாம்புலியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai