சுடச்சுட

  

  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: 41,212 மாணவ, மாணவிகள் எழுதினர்

  By கடலூர்/சிதம்பரம்  |   Published on : 16th March 2016 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 41,212 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.

  தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.

  கடலூர் மாவட்டத்தில் இத்தேர்வினை 406 பள்ளிகளிலிருந்து 38,300 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் மாணவர்கள் 19,303, மாணவிகள் 18,997 பேர்களாவர். கடந்த ஆண்டை விட தற்போது 1,637 மாணவர்கள் குறைவாகவே தேர்வு எழுதுகின்றனர்.

   மேலும், இத்தேர்வினை எதிர்கொள்ளும் தனித் தேர்வர்கள் 2,912 பேரில் ஆண்கள் 2,290, பெண்கள் 622 பேர்களாவர். தனித் தேர்வர்கள் உள்பட மொத்தம் 41,212 பேர் தேர்வு எழுதினர்.

  இதற்காக மாவட்டம் முழுவதும் 117 தேர்வு மையங்கள், 12 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, 24 வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

   கடலூரில் உள்ள தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு அவர் கூறியது: தேர்வுப் பணிகளை கண்காணிப்பதற்காக முதன்மை கண்காணிப்பாளர்களாக 117 பேரும், துறை அலுவலர்கள் 117 பேரும், வழித்தட அலுவலர்கள் 28 பேரும், பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் 300 பேரும், சொல்வதை எழுதுபவர்கள் 96 பேரும் மற்றும் அறை கண்காணிப்பாளர்களாக 2,445 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

   தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுகளை சிறப்பாக எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இத்தேர்வானது ஏப்.13ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்றார் அவர்.

  ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் ரெ.பாலமுரளி மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் உடனிருந்தனர்.

  சிதம்பரம்: சிதம்பரம் நகரில் 9 மையங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்புத் தேர்வை 2,200 மாணவ, மாணவிகள் எழுதினர். நகரில் மனவளர்ச்சி குன்றிய 9 மாணவர்கள், பார்வையற்ற மாணவர்கள் 2 பேர், காதுகேளாத மாணவர்கள் 13 பேர் உள்ளிட்ட 27 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai