சுடச்சுட

  

  பாண்டியநாயகம் கோயிலில் பங்குனி உத்திர உற்சவக் கொடியேற்றம்

  By சிதம்பரம்  |   Published on : 16th March 2016 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலின் வடக்கு கோபுரம் அருகே வீற்றுள்ள ஸ்ரீ பாண்டியநாயகம், ஸ்ரீ சுப்பிரமணிய கோயிலில் பங்குனி உத்திர உற்சவக் கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஷண்முக சுந்தர தீட்சிதர் கொடியேற்றி உற்சவத்தை தொடங்கி வைத்தார்.

   உற்சவத்தை முன்னிட்டு தினமும் இரு வேளைகளிலும் சுப்பிரமணியர் நான்கு வீதிகளிலும் புறப்பாடு நடைபெறும். மார்ச் 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தேர் உத்சவமும், மாலையில் தேவசபையில் லட்சார்ச்சனையும், மார்ச் 23ஆம் தேதி சிவகங்கையில் பங்குனி உத்திர தீர்த்தவாரி உத்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai