சுடச்சுட

  

  கடலூரில் செவ்வாய்க்கிழமை புகைப்படக் கலைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  தேர்தல் பணிகளில் பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் தேர்தல் பார்வையாளர்கள் வரவுள்ளனர். ஒவ்வொரு படையினருடனும், அவர்கள் செல்லும் வாகனத்தில் விடியோ ஒளிப்பதிவாளர்கள் இடம் பெற்றிருப்பார்கள். கடந்த காலங்களில் மாவட்ட நிர்வாகம் மூலமாக நியமிக்கப்பட்டு வந்த புகைப்படக் கலைஞர்கள், தற்போது ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.

  ஆனால் இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், குறிப்பிட்ட ஒருதரப்புக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கடலூர் மாவட்ட புகைப்பட மற்றும் விடியோ கலைஞர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டினர். எனவே, கடந்த தேர்தலைப்போல விடியோ கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.ராமநாதன் தலைமை வகித்தார். நிர்வாகி எஸ்.ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். மாநிலச் செயலர் எஸ்.கபாலீஸ்வரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

  அப்போது அவர் கூறுகையில், கடந்த சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் வீடியோ ஒளிப்பதிவாளர் பணியில் ஈடுபட்டுள்ளோம். அப்போது சங்கத்தின் சார்பில் வீடியோ எடுப்பதற்காக ஒப்பந்தம் பெறப்பட்டு அதனை சங்கத்தில் உள்ளவர்களுக்கு பிரித்து வழங்குவோம்.

  இதனால், ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு ரூ.1,500 வரை ஊதியம் கிடைத்து வந்தது. ஆனால், தற்போது கூடுதல் தொகைக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு, குறைவான ஊதியமே ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே, பழைய முறைப்படியே ஒளிப்பதிவாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai