சுடச்சுட

  

  அரசுப் பேருந்தில் ஏற்றப்படும் சரக்கு மூட்டைகளால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

  விழுப்புரம் கோட்டத்திலிருந்து கடலூர் மாவட்டப் பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சிதம்பரம், வடலூர், நெய்வேலி பகுதிகளில் இருந்து பண்ருட்டி வழியாக சென்னை செல்லும் பேருந்துகளில், பலா பிஞ்சு மூட்டைகள், பலாப்பழங்கள், முந்திரி பயறு மூட்டைகள் ஏற்றப்படுகின்றன.

  பேருந்துக்குள் பயணிகள் நடந்து செல்லும் பகுதியை மறைத்து மூட்டைகள் கிடத்தப்படுவதால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பேருந்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் மூட்டைகளை கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

  இதுகுறித்து போக்குவரத்துத் துறை ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது, அரசுப் பேருந்துகளில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சிறிய அளவிலான சுமைகளை கொண்டு செல்லலாம்.

  சரக்கு மூட்டைகளை பேருந்தின் கூரை மீது ஏற்றிச் செல்லலாம்.  ஆனால், சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில்  நடந்து செல்லும் வழியில் மூட்டைகளை கிடத்துவது முறையல்ல என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai