சுடச்சுட

  

  நெல்லிக்குப்பம் அருகே உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

  சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுத்துச் செல்வோர், உரிய ஆவணங்களுடன் செல்ல வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணத்தினை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

   இந்நிலையில், நெல்லிக்குப்பம் சாலையில் நிலை கண்காணிப்புக்குழு (3) ஏ.சந்திரராசு தலைமையில் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்து

  சோதனை நடத்தினர். அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சம் பணம் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்ததாம். அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai