சுடச்சுட

    

    வாக்காளர்களுக்குப் பணம்: தேர்தல் ஆணையம் தலையிட பாமக வலியுறுத்தல்

    By கடலூர்  |   Published on : 16th March 2016 07:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் சில அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருவதாகவும், இதனை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் எனவும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    கடலூர் கிழக்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    மாவட்டச் செயலர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலர் அ.தர்மலிங்கம், துணைத் தலைவர்கள் ப.சண்முகம், பழ.தாமரைக்கண்ணன், மாவட்டத் தலைவர் பிஆர்பி.வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் சில அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கி வருகின்றனர்.

    இதனை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும்.

    வரும் மார்ச் 26ஆம் தேதி கடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தூக்கனாம்பாக்கம், கடலூர் முதுநகரில் நடைபெறும் கூட்டத்தில் ராமதாஸ் பங்கேற்று பேசுகிறார்.

    எனவே, இக்கூட்டத்தில் பொதுமக்கள், கட்சியினர் திரளாகப் பங்கேற்பது. மாவட்டத்திலுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பாமக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்குப் பாடுபடுவது என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     கூட்டத்தில், ஒன்றியச் செயலர்கள் ஆ.விஜயகாந்தி, தட்சணாமூர்த்தி, சகாதேவன், இளவரசன், ராமலிங்கம், மாவட்ட இளைஞரணித் தலைவர் வாட்டர்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, நகர் செயலர்கள் ஜெ.ராம்குமார் வரவேற்க, இள.விஜயவர்மன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai