சுடச்சுட

    

    அனல்மின் நிலையத்தில் திருட்டு: கார் ஓட்டுநர் கைது

    By நெய்வேலி  |   Published on : 17th March 2016 05:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெய்வேலி, அனல்மின் நிலையத்தில் பித்தளை பொருள்கள் திருடிய கார் ஓட்டுநர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    நெய்வேலி, வட்டம் 30, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஐயனார் மகன் கருப்பன் (46). இவர் என்.எல்.சி. தொழிலாளர்களை காரில் பணிக்கு அழைத்துச் சென்று வரும் ஒப்பந்த ஓட்டுநராக உள்ளார்.

    செவ்வாய்க்கிழமை அனல்மின் நிலையம் 1-ல் பணியாளர்களை இறக்கிவிட்டு விட்டு திரும்பியுள்ளார்.

    அப்போது, பிரதான வாயிலில் பணியில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காரை சோதனை செய்ததில், ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள 20 கிலோ பித்தளை பொருள்கள் இருந்துள்ளன.

    இதுகுறித்து, அனல் மின் நிலையம்-1 முதன்மை மேலாளர் கே.எஸ்.வேலுமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் கருப்பனை தெர்மல் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai