சுடச்சுட

    

    பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பிறந்த நாளை முன்னிட்டு மழவந்தாங்கலில் இலவச கண் பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது.

    புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், கஸ்தூரிபா குஷ்ட நிவாரண நிலையம், கல்வியியல் கல்லூரி, அடுக்கம் மருத்துவமனை, வடலூர் ஓ.பி.ஆர். நினைவு கல்வியியல் கல்லூரி இணைந்து இம்முகாமை நடத்தின. கடலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஷர்மிளா குத்து விளக்கேற்றி, பொள்ளாச்சி மகாலிங்கத்தின்  உருவப்படத்தை திறந்துவைத்து, முகாமைத் தொடங்கி வைத்தார்.  தாளாளர் இரா.செல்வராஜ் தலைமை வகித்தார். அரவிந்த் கண்மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் திருவேங்கடகிருஷ்ணன், கண்டாச்சிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர் மூர்த்தி, விழுப்புரம் முத்து பல் மருத்துவமனை மருத்துவர் ராமேஷ், அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    மொத்தம் 400 பேர் பங்கேற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 200 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai