சுடச்சுட

    

    கந்து வட்டி வசூலில் ஈடுபடும் நிறுவனங்கள்: எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

    By நெய்வேலி  |   Published on : 17th March 2016 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் கடன் நிறுவனங்கள் கந்து வட்டி போல் அதிகப்படியான வட்டியை வசூலிக்கின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏவுமான கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

    கடலூர், செல்லங்குப்பத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

    அரியலூரில் விவசாயி அழகர் (26), வாங்கிய கடனை கட்டவில்லை என்ற காரணத்தினால் தனியார் நிறுவனம் அவரை அவமானப்படுத்தியது.

    அவர் வாங்கிய கடனில் இன்னும் இரண்டு தவணை தான் பாக்கி உள்ளது.

    டிராக்டரை கட்டாயமாக பறிமுதல் செய்து சென்றனர். அவமானம் தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    விவசாயிகளுக்கு அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் கொடுத்திருந்தால், தனியார் வங்கிகளுக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை.

    அரசு வங்கிகளில் கடனை பெற்று சுய உதவிக் குழுக்களை நடத்தும் நிறுவனங்கள் பல மடங்கு அதிக வட்டிக்கு சுயஉதவிக்குழு மகளிருக்கு கடன் கொடுக்கிறது.

    மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறினால் இதைத் தடுக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை என்று கூறுகிறார்.

    மக்கள் நல கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால்,  வங்கிகள் மூலம் ஏழைகளுக்கு கடன் கொடுக்கப்படும் என்றார்.

    கூட்டத்துக்கு நகரக் குழு உறுப்பினர் கே.ஸ்டாலின் தலைமை வகித்தார்.

    மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், ஜி.மாதவன், வி.சுப்புராயன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.ஆளவந்தார். எஸ்.தட்சிணாமூர்த்தி, ஜெ.ராஜேஷ்கண்ணன், ஆர்.அமர்நாத், ஜி.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai