சுடச்சுட

  

  அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய இரண்டு டிப்பர் லாரிகளை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

   நடுவீரப்பட்டு வழியாக கிராவல் மண் கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதனை தொடர்ந்து, நடுவீரப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் சக்கரபாணி தலைமையில் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  வானமாதேவி பாலம் அருகே சோதனையின் போது அவ்வழியே வந்த இரண்டு டிப்பர் லாரிகளை மடக்கி விசாரணை நடத்தினர். அதில் உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இரு டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்த போலீஸார், அதன் ஓட்டுநர்கள் கடலூர் முதுநகர் சுத்துகுளத்தைச் சேர்ந்த பிரசாத் (22), பச்சையாங்குப்பம் ஆறுமுகம் (38) ஆகியோரை கைது  செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai